நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, 26 May 2016

மலை மீது வந்த மலையப்ப பெருமாள்

கீரப்பாக்கம் இந்து- முஸ்லிம்- கிறித்தவர் என மும்மதத்தினர் ஒற்றுமையோடு வாழ்கிற ஊர். பல இன மக்கள் இங்கே பாசத்துடன் பிரச்சினையின்றி வாழ்கிறார்கள்.
பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும், பின் தங்கியவர்களும் இங்கே வாழ்கிறார்கள். கிராமம் என்றால் சண்டை சச்சரவுகள், கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவற்றை சகஜமாக பார்க்கலாம் என்பார்கள். எல்லாவற்றுக்கும் விதிவிலக்கானது இந்த ஊர்.
இப்படிப்பட்ட சிறந்த ஊரில் பாபா அமர்ந்து ஆளுகிறார். இப்போது பாபா அமர ஏற்பாடு செய்திருந்த மலை மீது யாரும் எதிர்பார்க்காத வகையில் மலை மேல் பெருமாள் எழுந்தருளியுள்ளார். மலையில் கார்த்திகை மாதத்தில் மக்கள் தீபமேற்றி வழிபடுகிறார்கள். முதல்நாள் சிவ கார்த்திகை, மறுநாள் விஷ்ணு கார்த்திகை. பாரம்பரியமாக பாறைமீது தீபம்ஏற்றி வந்தார்கள். இதற்காக அக்னி குண்டம்ஒன்றை அமைத்துத் தந்திருக்கிறோம்.
பஞ்சாயத்து அனுமதியோடு கீரப்பாக்கம் மலை மீது பாபா ஆலயத்திற்காக சாலையமைத்து, தரையை சமப்படுத்தி ஆலயத்திற்கான அடித்தளம் அமைத்து, வரு பொருளையும் உறு பொருளையும் செலவிட்டு, எத்தனையோ ஆண்டுகளாக வீணாகக் கிடந்த இந்த இடத்தை சுத்தப்படுத்தியிருந்தோம்.
வாழ்க்கையின் உச்சத்திற்குப் போக கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்து சிறிது சிறிதாக முன்னேறிப் போகவேண்டும். இப்படி உழைப்பவர்களுக்கு எப்படி பலன் உறுதியோ அப்படி வணங்குவோருக்கும் பலன் உறுதி என்பதைப் பறை சாற்றும் விதமாக பெருமாள் பிரம்மாண்ட ஸ்வரூபியாக வந்திருக்கிறார்.
மக்கள் பணக் கஷ்டம், கடன் தொல்லை, வேலையின்மை போன்றவற்றால் அவதிப் படுவதை நீக்கி பொருளாதார வளம் தர பெருமாளை வேண்டி இவருக்கு குபேர பெருமாள் எனப்பெயர் சூட்டியுள்ளோம். பாபாவே பெருமாளாக அமர்ந்தார் என்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது.
பெருமாள் ஆலயத்திற்கு மண்டபப் பணி, கோபுரப் பணி, தூண்கள், கதவு, வாசற்கால், படிகள் போன்றவை ஏற்படுத்த விரும்பும் நாராயண பக்தர்கள் இதற்கான செலவை ஏற்க முன்வந்தால், விருப்பத்துடன் வரவேற்கிறோம்.
தங்களுடைய கைங்கர்யம் சார்ந்த அனைத்து தகவல்களையும் கீரப்பாக்கம் பாபா ஆலயத்திலுள்ள முன்னாள் தாசில்தார் சம்பந்தம் அவர் களிடம் தெரிவிக்கலாம். அல்லது பெருங்களத்தூர் பாபா ஆலய நிர்வாகியிடமோ, ஸ்ரீ சாயி வரதராஜன் அவர்களிடமோ தெரிவிக்கலாம். பாபா உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

No comments:

Post a Comment