நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, 19 May 2016

மலை மீது பாபா விக்ரஹம்

கீரப்பாக்கம் கொத்து மலையின் மீது பாபாவின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் இனி பாபாவையும் மலையில் தரிசனம் செய்யலாம். ஆலயம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, சாயி வரதராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய விக்ரஹம் மலை மீது பிரதிஷ்டை செய்யப்படும்.
இருட்டு நேரத்தில் மலையின் மீது ஏறிச் செல்வது நல்லது அல்ல. ஆறு மணிக்குள் தரிசனத்தை முடித்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment