ஏப்ரல் மாத சீரடிப்பயணம் கீரப்பாக்கம் பாபா ஆலய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இந்த யாத்திரையில் கலந்துகொண்ட 87 சாயி பக்தர்களும் தங்கள் பங்களிப்பாக ஆறாயிரம் ரூபாய் நன்கொடை தர, சாயி வரதராஜன் தனது பங்களிப்புக்கு
மீதம் செலுத்தி இரண்டரை அடி உயரத்தில் பளிங்கு சிலையை வாங்கித் தந்திருக்கிறார்.
இந்த விக்கிரகம் ஆதம்பாக்கம் முனுசாமி, ஸ்ரீதரன், நாகர்கோவில் சிவக்குமார்,
திருநின்றவூர்
பாலாஜி, கஜேந்திரன், யுவராஜ் ஆகியோரால் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு, கீரப்பாக்கம் ஆலயத்தில்
வைக்கப்பட்டது.
1, மே 2016 ஞாயிறு அன்று இந்த விக்ரகம்
மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
யாத்திரைக்கு வந்த சாயி பக்தர்கள் கலந்துகொண்டு
இதைப் பிரதிஷ்டை செய்தனர்.
முன்னதாக, பாண்டிச்சேரி பாபா மாஸ்டர் விமானம் மூலம் சீரடி வந்திருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் சேர்ந்து மூன்றரை அடியில் பாபா விக்கிரம் வாங்கித் தருகிறார்கள். இதற்காக முன்பணம் சாயி வரதராஜன் மற்றும் கோவை டாக்டர் முருகையன் ஆகியோர் முன்னிலையில் கடையில் தரப்பட்டுள்ளது.
பாபா மாஸ்டர் தனது சீடர்கள் வானகரம் ராஜேந்திரன், குமரேசன் ஆகியோரிடம்
விக்கிரகம் வாங்கித் தருவது பற்றி உடனடியாகத்
தெரிவித்துவிட்டார். இந்த விக்கிரகமும் விரைவில் நிறுவப்பட
உள்ளது.

No comments:
Post a Comment