நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday, 26 May 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் பெருமாள்

கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் பெருமாள் வழிபாட்டுக்கு அர்ச்சகர் யாரும் நியமிக்கப்படவில்லை. பக்தர்கள் தாங்களாக இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்யலாம்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விரும்புவோர் முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
மலையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தண்ணீர் வாங்கித் தருவோர் கோயிலில் 500 ரூபாய் செலுத்தலாம்.
கீரப்பாக்கம் கோயிலுக்குப் பசுமாடு ஒன்று ரவி சங்கர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. சினையாக உள்ள இந்த மாட்டுக்கு உணவு, புல் போன்றவற்றை அளிக்க விரும்புவோரும் கீரப்பாக்கம் கோயிலை அணுகவும்.

No comments:

Post a Comment