நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday 9 June 2016

பாபாவை தரிசிக்க



பாபாவை தரிசிக்க

வாரத்தில் ஒருநாள் பிள்ளைகளோடு பொழுதைக் கழிக்க நினைப்பவர்கள் கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு ஞாயிறு அன்று விடுமுறை தினத்தில் வருவது சிறந்தது. பயணத் திட்டத்தை பின்வருமாறு வகுத்துக் கொள்ளலாம். வண்டலூர் உயிரியல் பூங்கா, ரத்தின மங்கலம் பாபா ஆலயம் மற்றும் குபேரர் ஆலயம், கீரப்பாக்கம் பாபா ஆலயம், கேளம்பாக்கம் மசூதி, கோவளம் கடற்கரை, மகாபலிபுரம் ஆகியவை வரிசையாக உள்ளன.
எந்தப் பக்கமிருந்து கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்கு வருகிறீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள். வண்டலூர் வந்துவிட்டால் உயரியல் பூங்காவில் நுழைந்தால் குறைந்தது மூன்று மணி நேரமாவது சுற்றிப்பார்க்கவேண்டியிருக்கும். ஆகவே, அதை கடைசித் திட்டமாக வைத்துக்கொண்டு காலையில் ரத்தின மங்கலம் ஆலயத்தை தரிசித்துக் கொண்டு கீரப்பாக்கம் பாபா ஆலயம் சென்றுவிடலாம். அல்லது, நண்பகல் வரை வண்டலூரில் இருந்தால் மதிய நேரத்திற்குப் பிறகு கீரப்பாக்கம் ஆலயம் வந்து பாபாவை தரிசித்து சாப்பிட்டு நான்கு மணிக்கு மேல் இரத்தின மங்கலம் பாபா ஆலயத்தை தரிசிக்கச் செல்லலாம்.
போன்: 9841203311

No comments:

Post a Comment