நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Thursday 16 June 2016

குழுவாக சேவை செய்ய வாங்கோ!

கடந்த இதழில் ராஜா ராம் என்ற சாயி பக்தர், கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்குச் செய்த சேவை பற்றி படித்தபோது எங்களுக்கும் செல்லவேண்டும் என்று தோன்றியதால் சென்றிருந்தோம்.
மலையில் பிரம்மாண்டமாக பெருமாள் விக்ரஹம் நிறுவப்பட்டு கோயில் கட்டுமானப் பணி தொடர்ந்துகொண்டிருந்தது. ஆலயத்திற்கான பெரும் பாலான செலவுகளை சாயி வரதராஜன் செய்வதாகக் கேள்விப்பட்டு பிரமித்துப் போனோம். எங்கள் பிரமிப்புக்குக் காரணம், ஒரு சாதாரண மனிதனால் எப்படி இவ்வளவு பெரிய திட்டத்தை எடுத்து நடத்த முடிகிறது என்பதுதான்.
பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பற்றி எங்கள் வீட்டில் கூறியபோது, என் தந்தையார் உண்மையாகவா? என பலமுறை கேட்டுக்கொண்டிருந்தார். பெருமாளை அவ்வளவு சீக்கிரம் எளிதாகக் கொண்டு வந்து யாராலும் நிறுத்தமுடியாது. இவர் எப்படி நிறுத்தினார்? எனக் கேட்டார். பெருமாளை வெயிலில் இருக்கவிடக்கூடாது, உன்னால் முடிந்ததைச் செய் எனக் கூறினார்.
இது எப்படி சாத்தியமாகும் எனக் கேட்டபோது, வெறும் ஐம்பது பேர் தனித்தனி குழுவாக இணைந்து நமக்குள் ஒரு குழுவுக்கு ஐம்பதாயிரம் வீதம் சேர்த்தாலே இந்தக் கோயில் பிரம்மாண்டமாக அமையும். அந்த மனிதனுக்குச் சுமையும் குறையும்என்று கூறினார். இது நல்ல யோசனையாகத்தெரிந்தது. எனவே சாயி தரிசனம் வாசகர்களுக்கு இந்த யோசனையை முன்வைக்கிறேன்.
இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டுமானால் நிறைய தூரம் அவர் பயணிக்க வேண்டியிருக்கும். எங்களால் முடிந்தது என ஐம்பது மூட்டை சிமெண்ட் வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தோம். தொடர்ந்து சின்னச் சின்ன சேவைகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்தோம்.
விருப்பமுள்ளவர்கள் இணைந்து இந்த சேவையை சாதிக்கலாம். வருவீர்களா?
-என்.எஸ். அனந்தராமன்,
அரும்பாக்கம்

No comments:

Post a Comment