நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Friday 24 June 2016

கீரப்பாக்கம் பாபாவுக்கு பாலபிஷேகம்!

கீரப்பாக்கம் பாபா ஆலயம் அமைந்து    மூன்று ஆண்டுகள் ஆனதையொட்டி பக்தர்கள் அவரவர்களே, தம்      கைகளால் பாபாவிற்க்கு பாலாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளை அனுபூதி சித்தர், தாசில்தார் சம்பந்தம், ரவி சங்கர் ஆகியோர் மேற்கொண்டார்கள்.
ஒரு பக்கம் பூசப்படாமல் இருந்த சுவருக்குப்பூச்சுவேலை செய்தும், பீடத்தை சரி செய்தும். கோயிலை சுற்றி வர சிமெண்ட் பாதை அமைத்தும் சரி செய்தார்கள். இதற்காக எழுபது ஆயிரம் ரூபாய் சம்பந்தம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
ஜோதிடரும், உபாசகருமான நரசிம்மாச்சாரி கனவிலும், பிரசன்னத்திலும் பெருமாள் தோன்றி, “அது எனக்கு உரிய மலை. நான் அமராமல் எந்த செயலையும் செய்ய இயலாது; செய்ய முனைந்தாலும் கிராமத்திற்கு ஆபத்தாக முடியும்என்று கூறியதாக அனுபூதி சித்தர் கூறியிருந்தார்.
இந்த மலையை குவாரிக்கு விட்டிருந்தபோது, இதற்கு பெருமாள் மலை என்று பெயர் சூட்டி அதன் மூலம் வந்த வருவாயை கிராம மக்கள் அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டு எடுத்துக்கொண்டோம்என்று கூறினார் ரவி சங்கர்.
இந்த மலை உச்சியில் கார்த்திகை மாதத்தில் முதல் தீபத்தை சிவபெருமானுக்காகவும் மறுநாள் கார்த்திகையை பெருமாளுக்காகவும் ஊரில் தலைமுறை தலைமுறையாக ஏற்றி வருகிறோம். அதை முறையாகச் செய்ய வேண்டும் என்பதால்தான் தீப குண்டம் உருவாக்கினோம்என்றார்.
நரசிம்மாச்சாரியார் சொல்வதுபோல பெருமாள் கோயில்தானே! ஓர் அடியில் பெருமாளை வைத்துக்கொள்ளலாம் என நினைத்து, அனுபூதி சித்தரிடம் கூறினேன்.
கண்டிப்பாக ஏழு அடியில் பெருமாளை வைக்க வேண்டும், பாதிப்புக்கு ஆளாகவேண்டாம் என கூறுங்கள்என ஆச்சாரியார் அறிவுறுத்தியதாக அனுபூதி சித்தர் வந்து கூறினார்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கிற என்னால் இது எப்படி சாத்தியமாகும்? என நினைத்துக் கொண்டிருந்தபோது ஆதம்பாக்கம்முனுசாமி, “சாயி ராம், பெருமாள் விக்கிரகம்வாங்கித் தர எனக்கு உத்தரவு வந்திருக்கிறது. நான் வாங்கித் தருகிறேன்என்று கூறினார்.
இது பற்றி ஊர்த்தலைவர் டாக்டர் ஹரிகிருஷ்ணன், பஞ்சாயத்து செயல் அலுவலர் நீலமேகம், சந்துரு மற்றும் அவரது தந்தையார் உட்பட கிராம மக்களிடம் கூறியபோது, இதைச் செய்தால் மக்கள் மகிழ்வார்கள் என்று கூறினர்.
ஸ்தபதி மூர்த்தி, “எனக்குத் தெரிந்த ஒரு சிற்பியிடம் பெருமாள் விக்கிரகம் இருக்கிறது, கேட்டுப்பார்க்கலாமா?” எனக் கூறினார்.
ஏழு அடியில் பெருமாள் விக்ரஹம் தயாராக இருந்தது. தலைவர் ஹரிகிருஷ்ணனை தொடர்பு  கொண்டோம். வாங்க அனுமதி தந்தார். முனுசாமி ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை உடனடியாகத் தந்தார்.
இதற்கிடையே டிசம்பர் 2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு கீரப்பாக்கமும் தப்பவில்லை. பலருடைய ஆடுகள்கூட இறந்தன. பாபா ஆலயத்தில் சேவை செய்கிற முஸ்லிம் அம்மா ஒருவரின் ஆடுகளும் இறந்தன. பாபா கோயிலுக்காக அவரிடம் இரண்டு ஆட்டுக் குட்டிகளை வாங்கி ஒப்படைத்திருந்தேன், அவையும் இறந்தன.
ரவி சங்கரிடம் பாதிக்கப்பட்டவர்களுக்காகக்கோயிலைத் திறந்துவிடுமாறு கூறினேன். சம்பந்தம் ஐயாவிடம் மக்களுக்கு குறைவின்றி அன்னதானம் வழங்க அறிவுறுத்தப் பட்டது.
இந்த சூழ்நிலையில்தான் காசிலி சுவாமி கீரப்பாக்கம் வருவதாகத் தகவல் தெரிவித்திருந்தார். பாலபிஷேகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. எல்லா ஏற்பாடுகளையும் சம்பந்தம் மற்றும் ரவி சங்கர் ஆகியோர் செய்தார்கள்.
அனுபூதி சித்தர் அடியேனின் வீட்டுக்கு வந்து, “ஐயா, இந்த ஊர் சேமத்திற்காகத்தான் பொது மக்கள் கைகளால் பாலபிஷேகம் செய்கிறீர்கள்; அதேபோல விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து விடலாமே!எனக் கூறினார்.
மார்கழி மாதமாக இருக்கிறது, அன்றைக்கு முகூர்த்த நாளும் இல்லை; எப்படி இந்த பிரதிஷ்டை செய்வது?” எனக் கேட்டேன்.
இறைவனுக்கு உகந்த மாதம் மார்கழி. இதில் நாள் கிழமை பார்க்கவேண்டாம் எனக் கூறினார். ஆகவே, சுவாமியை பிரதிஷ்டை செய்ய தலைவரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் ஒப்புதல் தந்ததோடு, அன்னதானச் செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து மகாபலிபுரத்திலிருந்து பெருமாள் விக்ரஹத்தை எடுத்து வர மங்கள்தாஸ் சிற்பிக்குப் போன் செய்தோம். அவர் சனிக்கிழமை இரவு பெருமாளுக்கு பூஜை செய்து வண்டியில் ஏற்றி தயாராக வைத்துவிட்டு, மறுநாள் காலை பெருமாளை கீரப்பாக்கத்திற்கு எடுத்து வந்தார். கூடவே கணபதி, கருடாழ்வார், தேவியர் என பிற விக்ரகங்களையும் எடுத்து வந்தார்.
குபேர பாபா ஆலய நிறுவனர் தோத்தாத்திரி, காஞ்சீபுரம் கிருஷ்ணமூர்த்தி, ரமா அம்மையார் உட்பட ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள்.
ஏழே முக்கால் மணிவரை தோத்தாத்திரியை வைத்து சக்கர பூஜையை அனுபூதி சித்தர் செய்தார். பிறகு அவரை மலைக்கு அழைத்துச்சென்று யந்திரப் பிரதிஷ்டையை எட்டு மணிக்குள் செய்துமுடித்தோம். (எட்டு மணி பத்து நிமிடத்திற்குப் பிறகு பாட்டியம் என்கிற பிரதிமை திதி ஆரம்பமாகிறது என்பதால் இந்த நாளில் எதையும் செய்யமாட்டார்கள்.)
பெருமாள் சுமார் ஒன்பது பதினைந்துக்கு கீரப்பாக்கம் மலையில் வடக்கு பார்த்து பாதம் பதித்து நின்றார். மக்கள் கோவிந்த நாம கோஷத்தோடு பரவசத்துடன் பெருமாளை வரவேற்று அவரது பாதங்களை நீராலும் பக்தியாலும் கழுவினார்கள்.
குழந்தைகள் முதல் பெரியோர் வரை பகவானுக்கு அபிஷேகம் செய்தார்கள்; கண் திறப்பு வைபவம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக ஆலயத்தில் வடக்கு நோக்கியவாறு விநாயகரை பிரதிஷ்டை செய்தார் அனுபூதி சித்தர். பதினோறு மணிவாக்கில் காசிலி சுவாமி வந்தார். அதன்பிறகு பாபா மாஸ்டர் அருணாசலம் வந்தார்.
பெருமாள் புகழ்பாடியபடி பக்தர்கள் கிரேன் மூலம் பெருமாளை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அவருக்காக அமைக்கப்பட்ட பீடத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.
காசிலி சுவாமிகள், பாபா மாஸ்டர், எக்ஸ்னோரா தலைவர் நிர்மல், ஊர்த்தலைவர் டாக்டர் ஹரிகிருஷ்ணன், உபதலைவர் தனபால், மன்ற உறுப்பினர்கள், கிராமப் பொதுமக்கள் மற்றும் சாயி பக்தர்கள் முன்னிலையில் பெருமாள் தனது ஸ்தானத்தில் நிலைபெற்றார்.
சுவாமியை ஸ்தாபிதம் செய்வதற்கு முன்தினம்   மாலை சாந்தி என்கிற சாயி பக்தை சாயிக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிவர அனுமதி கேட்டார். பெருமாளே திடீரென வருகிறார்; அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்துவிடுங்கள் எனக் கூறினேன். தனது சகோதரர் நெடுஞ்செழியனுடன் பூஜைப் பொருட்களையும், சுவாமிக்கு வஸ்திரம், கண் திறக்க வெள்ளி ஊசி ஆகியவற்றையும் வாங்கிவந்து இரவு பதினோறு மணியளவில் கீரப்பாக்கம் ஆலயத்தில் சேர்ப்பித்து இருந்தார்.
சுவாமியை நிலை நிறுத்திய பிறகு பக்தர்கள் வரிசையில் நின்று பாபாவுக்கு பாலபிஷேகம் செய்து அன்னதானம் சாப்பிட்டு, திருப்தியோடு ஆசி பெற்றுச் சென்றார்கள்.
மலையில் எல்லோரையும் அனுப்பிட்டு சிற்பியை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்று, அவரை வழியனுப்பிவிட்டு, கடற்கரையில் காரை நிறுத்துமாறு வெங்கட்ராயலிடம் கூறினேன்.
கடலில் இறங்கி இறைவனை பிரார்த்தித்து, குழந்தைத் தனமாக எல்லாம் நடந்துவிட்டது; சாயி பக்தர்கள் இதைச் செய்தார்கள். இதனால் வரும் புண்ணியம் எனக்கு வேண்டாம், எல்லோருக்கும் போய்ச் சேரட்டும். இதன் மூலம் ஏதேனும் அபச்சாரம் விளைந்திருந்தால் அது யாரையும்சேராமல் தங்கள் திருவடியில் நசிந்து சாம்பலாகட்டும் என தலைமுழுகினேன்.
என் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளியே குளித்துவிடாதீர்கள், புண்ணியம் போய்விடும் என்றாள். ஏற்கனவே கடலில் தலைமூழ்கியாகிவிட்டது; புண்ணியமும் பாவமும் நமக்கு வேண்டாம்; அவையெல்லாம் போகட்டும் கண்ணனுக்கே!என்று கூறினேன்.
அனுபூதி சித்தர் தமது குடும்பத்தார் சார்பாக பெருமாள் கோயில் அமைக்க இருபதாயிரம் ரூபாய் தந்து திருப்பணியை துவங்கி வைத்தார். சேலம் சதீஷ் கீழ்ப்பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கான விலையைத் தர ஒப்புக்கொண்டார்.
பாபா ஆலயம் வராத மக்கள் கூட மலை மேல் பெருமாளை தரிசனம் செய்ய வந்தார்கள். இத்தனை ஆண்டுகாலம் நான் செலவழித்த தொகையை உருவாக்க நான் மேற்கொண்ட சிரமம் எல்லாம் தொலைந்துபோனது, இனி மக்கள் இறைவனை இங்கே தொழுதுகொள்வார்கள்.
பரமாத்மா மலைமீது அரசாட்சி கொண்டார், மாநிலம் செழிக்கட்டும்; மக்கள் நன்றாக வாழட்டும். துன்பமிலா நிலையை தமிழ்நாடு அடையட்டும்.

No comments:

Post a Comment