நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Tuesday 21 June 2016

கீரப்பாக்கத்தில் பரிகார லிங்கம்

அயப்பாக்கத்திலிருந்து வரும் பார்வதி அம்மாவின் தந்தையார் வரதராஜ முதலியார். தி.நகர் மற்றும் சைதாப்பேட்டைக்கு இடையில் கண்ணம்மா பேட்டை என்ற இடம் இருக்கிறது. கண்ணம்மா பேட்டை சென்றால் சென்னையிலேயே புகழ்பெற்ற இடுகாடு என்றுதான் எல்லோருக்கும் தெரியும். இந்த இடுகாட்டு நிலத்தை அளித்தவர் வரதராஜ முதலியார். அவர்களின் துணைவியார் பெயர் கண்ணம்மா. அவருடைய பெயரால்தான் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் அம்பாள் ஆலயங்கள் என பல ஆலயங்களுக்கு தானம் தந்து சொத்துக்களை இழந்தவர். இவருக்கு பதினாறு பிள்ளைகள். ஆண்கள் ஐந்து பேர். பதினோறு பெண்கள். இவர்களில் தற்போது மூன்று பேர்தான் உயிரோடு இருக்கிறார்கள். மூத்தவர் வேதாச்சலம் மும்பையில் வசிக்கிறார். பார்வதி அம்மா அயப்பாக்கத்தில் வசிக்கிறார். ஆனந்தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியாக வசிக்கிறார்.
பார்வதி அம்மாவின் மகன் மனோகரன். சாயி பக்தரான இவர் சமீபத்தில் காலமாகி விட்டார். இவர் நினைவாக கீரப்பாக்கம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ஏதேனும் விக்ரஹம் வாங்கித்தருவதாக பார்வதி அம்மா கூறியிருந்தார். அவரிடம் சிவபெருமான் விக்ரஹத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டிருக்கிறோம்.  கீழேயுள்ள பாபா ஆலயத்தில் ராகு - கேது பரிகார லிங்கமாக இது பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும்போது அது பற்றிய விவரம் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment