நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Friday 1 July 2016

கீரப்பாக்கம் பாபா ஆலயம்



கீரப்பாக்கம் பாபா ஆலயம், சாயி பக்தன் ஸ்ரீ சாயி வரதராஜனால் நிர்மாணம் செய்யப்பட்ட புனிதத் தலம். பெருங்களத்தூரை தலைமை யிடமாகக் கொண்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ் அறக்கட்டளை முன்னெடுத்து இதை உருவாக்கி யிருக்கிறது. இந்த ஆலய நிர்மாணத்திற்காக அணில் சேவை முதல் அனுமார் சேவை வரை செய்தவர்கள் எண்ணற்ற பக்தர்கள். அவர்களுடைய பெரிய மனம் இங்கே பாபா ஆலயமாக உருவெடுத்து நிற்கிறது.
உனக்கும் எனக்கும் இடையிலுள்ள திரையை நீக்கிவிடு என்ற சாயியின் வாக்கு இங்கே நடை முறையாக உள்ளது. பூசாரியில்லை; உங்கள் இறைவனைத் தொட்டு வணங்கத் தடையில்லை; இப்படித் தான் பூஜை செய்யவேண்டும், இதைத்தான் நைவேத்தியமாகப் படைக்கவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் இல்லை.
தந்தையாய் நினைப்போர் தாளைப் பணிந்து வணங்கலாம், மழலையாய் நினைத்து பக்தி செய்வோர் அவனது தலையை வருடி, உடை  உடுத்தி, உணவு ஊட்டி வழிபாடு செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகம் செய்து அழகு பார்க்கலாம். இங்குள்ள யாவரும் உதவியாளர்களே! உபத்திரவம் தரவோ, பணம் கொடு என கேட்கவோ மாட்டார்கள்.
ஆத்மார்த்தமாக வேண்டுவோர் தனிமையில் அமர்ந்து வேண்டலாம். பசித்தால் பக்கத்துக் கூடத்தில் அரிசி முதல் அன்னம் தயாரிக்கத் தேவையான பொருட்கள் உள்ளன; தாங்களாக தயார் செய்துகொள்ளலாம். வடநாடுகளில் உள்ளதைப்போன்ற வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது.
பொதுமக்களால், பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் உடைமையாகும். முற்றாக இதைப் பயன் படுத்திக்கொண்டு பக்தி வளருங்கள்.
சீரடிக்கு செல்லும் முன்பு தரிசித்துச் செல்லும் தலமாகவும், தேங்காய் உடைத்து வழிபடும் இடமாகவும் உள்ள இந்த ஆலயத்திற்கு கதவு ஜன்னல்கள் போடப்படவேண்டியுள்ளது.
மலையின் மீது பாபா அமரவேண்டிய இடத்தில் மலையப்பனாகிய ஸ்ரீஹரியானவர் குபேர பெருமாள் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி உள்ளார். ஊர் மக்கள் நிறுவிய இந்தப் பெருமாளுக்குக்கோயில் இல்லை, கருவறை இல்லை. திறந்த வெளியில் வெயிலில் நின்று பக்தருக்காக காத்திருக்கிறார் பெருமாள். அவருக்குக் கூரைவேயும் பணி சாயி வரதராஜனால் துவங்கப்பட்டுள்ளது.
சாயி பக்தர்கள் ஞானசம்பந்தம், ரவி சங்கர், பிரேமா அம்மையார் போன்றவர்கள் அங்கே தங்கி சேவையாற்றுகிறார்கள்.
இதுவரை இந்த ஆலயம் அமைய உதவி செய்த சாயி பக்த கோடிகளுக்கு பணிவான நமஸ்காரங்கள். இன்னும் உங்கள் உதவி இருந்தால் மிகப்பெரிய ஆலயங்கள் இங்கே உருவாகி எதிர்கால சந்ததிக்கு உபயோகமாகும். கொடு என கடவுள் அனுமதி தந்தால் உங்கள் கைங்கர்யங்களை பெருங்களத்தூர் கல்கி தெரு விலுள்ள சாயிபாபா பிரார்த்தனை மையத்திலும் செலுத்தலாம்; நேரில் வந்து கீரப் பாக்கம் பாபா ஆலயத்திலும் செலுத்தலாம்.
தொடர்புகளுக்கு
ரவிசங்கர் 9710205032
சம்பந்தம் 9444559964