நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Sunday 15 June 2014

கீரப்பாக்கத்திற்க்கு பாபா வந்த தகவல் – பகுதி 8




எவ்வளவு தவறு செய்தவர்களானாலும், அவர்களை வலிய கடிந்துகொள்ள மாட்டார். நீங்கள் தப்பு செய்கிறீர்கள், இது இயல்புதான். ஆனால், இப்போது நீங்கள் சாயி பக்தர், உங்களைத் திருத்திக் கொள்வது உங்களுக்கு நல்லது, பிறருக்கும் நல்லது என அன்பாக,  மெதுவாக சொல்வார். இதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.
ஓய்வில்லாமல் உழைத்ததினாலேயே அவரது இடுப்பு எலும்புகள் தேய்ந்துவிட்டிருக்கின்றன. மருத்துவர்கள் அவரை கடிந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் கால சங்க இலக்கியம் முதல் சாஸ்திர நு}ல்கள் வரை அவருக்கு அத்துப்படி. அவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசுவார்.
இத்தகைய ஐயாவின் மனதில் வாழ்வது என்பது சாயி பாபாவின் சந்நிதியில் வாழ்வதற்கு ஒப்பானது.
ஐயா உடல்நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டும் உடனடியாகப் போய் பார்க்கமுடியாத நிலை. தேனி போல சுறுசுறுப்பாக இருந்தவரை, படுத்தப் படுக்கையில் பார்க்க தைரியமில்லாத மனம்..
அவரைப் பார்த்தபோது, வலியால் துடித்துக்கொண்டிருந்தார். எப்போதும் சாயி சாயி என்று சொன்ன வாய், இப்போது பாபா.. வலிக்கிறது.. எனச்சொல்வதைக் கேட்க, வருத்தமாக இருந்தது.
நான் சோர்வடையும் போதெல்லாம், பாபா எப்படிஅவருக்குச் சொல்வாரோ தெரியாது. உடனடியாகப்போன் செய்து, என்ன சோர்வு? ஏன் கவலை? பாபா பார்த்துக்கொள்வார். பொறுப்பை அவரிடம் விட்டு விட்டு, பொறுமையாக இருங்கள் என்று சொல்வார்.
;நான், என் மனைவி பிள்ளைகள் ஆகியோர் பாபா மாஸ்டரை, பாபாவின் மறு உருவமாகவே நினைத்து வணங்கி வருகிறேhம்.
நிறைய பேர், ”பாபா மாஸ்டர் நினைத்தால், உங்கள் கோயில் பெரிதாக உருவாகும். அவருக்குத் தெரியாத பணக்காரர்கள் கிடையாது” என்பார்கள். நாங்கள் அதை விரும்புவதில்லை.
”பாபா மாஸ்டர் ஆசீர்வதித்தால் போதும், ஏழைகளைக் கொண்டே பாபாவுக்குப் பெரிய கோயில்களை அமைக்கமுடியும். பணக்காரன் என்பவன் பணம் வைத்திருப்பவன் அல்ல, நல்ல மனம் உடையவன். அவரது ஆசீர்வாதம் அத்தகைய மனங்களை என் பக்கம் திருப்பித் தரும்!”  என்பேன்.
அவரது ஆசீர்வாதத்தால்தான் கீரப்பாக்கத்தில் கோயில் அமைந்துவருகிறது. சாயியின் உத்தமமான தொண்டர் அவர். நமக்கு கிடைத்தற்கரிய குரு. அவர் நன்றாக வேண்டும் என மானசீகமாக எப்போதும் வேண்டிக்கொள்கிறேன்.
அவர் அடிபட்டு, மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்த போது, பாபா அவர் அருகே அமர்ந்து உரையாடியிருக்கிறார். இந்த விவரத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள். இதைப் பற்றி விவரமாக அடுத்த இதழில் கேட்டு எழுதுகிறேன்.
அது இருக்கட்டும். கீரப்பாக்கத்தில், விக்ஷமிகளால் உடைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டபோது, கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. ஆனால் பாபா, “நீ போ.. அமைதியாக இரு.. உன் வேலையைப்பார்.. நான் அவர்களிடம் உன் சார்பாக  எப்படி போராடுகிறேன் என்பதை மட்டும் வேடிக்கை பார்!” என்றார். இதே செய்தியை யாரோ ஒரு சாயி பக்தை எனக்கு அனுப்பியும் இருந்தார்.
நான், எனக்குத் தெரிந்த அதிகாரத்தைப் பயன்படுத்த நினைத்திருந்தேன். ஆனால், பாபாவின் கட்டளைக்குப் பிறகு, அனைத்தையும் விட்டு அமைதியானேன்.
கோயிலை இடித்தவர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் இதுவரை உருப்பட்டதாக வரலாறு இல்லை. அதன் விளைவும், பலமும் அவர்கள் மேலும் அவர்கள் சந்ததியின் மேலும் நிச்சயம் இருக்கும். தெய்வம் எப்போதும் நின்றே கொல்லும்..
ஒருமுறை இந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என பாபாவிடம் பிரார்த்தனை செய்து, பல லட்ச ரூபாய்களை செலவழித்திருக்கிறேன். இப்போது ஒரு சிறிய இடையூறால், நான் இந்த ஊரை சபிக்க விரும்பவில்லை. எத்தனை இடையூறு வந்தாலும், என் குரு விரும்பிய ஊர் இது. இந்த ஊர் நிச்சயம் வளரும். தவறு செய்தவர்கள் ஒருநாள் தவறுக்கு மனம் வருந்துவார்கள். இதனால் தளரக்கூடாது என்று விட்டுவிட்டேன்.
கீரப்பாக்கம் தலைவர் மூரிகிருக்ஷ;ணனை சந்தித்த போது, கொத்துமலையில் முதலில் விநாயகர் ஆலயத்தை எழுப்புமாறு கூறினார்கள். ஜமீன் வாரிசு வெங்கட்ராமன், அவரது மகன் சந்துரு ஆகியோர், ஃநாலரை வருடமாக பூi போட்டதோடு பிள்ளையார் கோயில் கட்டப்படாமல் இருக்கிறது..ளூ என்றார்கள்.
கட்டித் தருகிறேன். ஃகணபதிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்?ளூ என்றேன்.
இதுவரை சூட்டவில்லை என்றார்கள். ஃமாணவ ரூh கணபதி எனப் பெயர் வையுங்கள். கூடவே, சரஸ்வதிடூ மூயக்கிரீவர் சிலைகளை பிரதிக்ஷ;டை செய்யுங்கள். பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் அருள் பெறட்டும்-ளூ என்றேன்.
ளூஜமீன் அரண்மனையின் படிகள் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம்? எனக் கேட்டார்கள்.
ஃகோயில் அமைந்த பிறகு, தனி வாயில் வைத்து, அந்தப் படிகளைப் பொருத்துங்கள், அதற்கு ராஜபடிகள் எனப் பெயர் சூட்டுங்கள்.. இந்தக் கோயில் புகழ் பெறும்-ளூ என்றேன்.
ஸ்தபதியை அழைத்து, ஊர்ப் பெரியவர்களுடன் கலந்து பேசி, பணியைத் துவக்குமாறு கூறினேன்.
மலையில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு மட்டும் சுமார் ஆயிரம் ணுபாய் வரை தினமும் செலவழிக்க வேண்டியிருந்தது. அனைத்தையும் மலையில் ஏற்றிச் செல்லவேண்டும்.
இப்போதுதான் நான் என்னை குருவியாகவும் இந்த பொறுப்பை பெரிய மலையாகவும் நினைக்கலானேன்.
என்னால் முடியுமா? என நினைத்தபோது, திருப்பங்கள் நிறைய வந்தன.
(தொடரும்)

Saturday 14 June 2014

கீரப்பாக்கத்திற்க்கு பாபா வந்த தகவல் – பகுதி 7




அதிகாலையில் இந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ”என்ன ஆயிற்று?” என்றேன்.
”இரவு நன்றாகத்தான் இருந்தார்.. விடிந்து போய் பார்த்தால் இப்படியாகியிருக்கிறது”  என்றான்.
உள்ளூரிலிருந்த எனது மற்ற தம்பிகளுக்கு போன் செய்தபோது, அவர்களுக்கு தகவல் தெரியவில்லை. நான் சொன்னபிறகுதான் விக்ஷயமே தெரிந்தது.
குடும்பத்தோடு தனியாக வாடகைக் கார் அமர்த்திக்கொண்டு புறப்பட்டேன்.
காஞ்சீபுரத்தை தாண்டவில்லை. கார்த்திக் போன் செய்து, ’கீரப்பாக்கத்தில் கட்டிவந்த நமது அன்னதானக் கூடம், ஆலய அமைப்பு ஆகியவற்றை யாரோ விக்ஷமிகள் இடித்து விட்டார்கள்’  என்று போன் செய்தார்.
’வந்து பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.
’உனக்கு இந்த கட்டிடம் வேண்டுமா? அந்தக் கட்டிடம் வேண்டுமா? எனக் கேட்கிறார்கள். நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய். நீ ஒரு முட்டாள்..எனக்கு அந்தக் கட்டிடம் தான் வேண்டும் என்றிருப்பாய். ஆனால் எனக்கு இந்தக் கட்டிடம் தேவைப்படுகிறது. அதனால் இதை வேண்டும் எனக்கேட்டேன்1’ என்று பாபா கூறியது நினைவுக்கு வந்தது..
நான் பாபாவிடம் கேட்டேன். ’சரி,  நீ கோயில் கட்டிடத்தை இடிக்க ஒப்புக் கொண்டாய் என்றால், என் தம்பி எதற்காக இறக்கவேண்டும்?
அவரிடம் கேள்வி கேட்கமுடியுமா? என்ன? காரணகாரியத்தோடுதானே வேலை செய்வார் என நினைத்தபடி ஊருக்குச் சென்றேன்.
ஈமக் கிரியைகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த போது, எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பாபா மாஸ்டர் அருணாசலம் ஐயா அவர்கள் மருத்துவ மனையில் உடல் நலமின்றி இருக்கும் தகவல் வந்தது.
மனிதர்களில் சிறந்தவர் என அவரை மதிப்பேன். எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் அவர். யார் அழைத்தாலும் உடனே சென்றுவிடுவார். கொடுக்கிற உணவை உண்டு அவர்களை வாழ்த்துவார்.
சில நாட்களுக்கு முன்பு, திடீரென என்னைப்பார்க்க வந்துகொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அப்போது கீரப்பாக்கம் மலையடிவாரத்தில் இருந்தேன்.
காரிலிருந்து இறங்கி வரும் அவரை தூரத்திலிருந்து பார்த்தபோது, மிகவும் சோர்வாக இருந்தார். அவர் வந்ததும் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றேன்.
’உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் மெலிந்து சோர்வாக இருக்கிறீர்கள்! என்றேன்.
”ஒரு வாரமாக காய்ச்சலில் படுத்திருந்தேன்..இப்போது, எனக்கு வேண்டிய வெங்கட்டின் தங்கை மகனுக்கு ஒரு பள்ளியில் இடம் தேவைப்படுகிறது. உங்கள் உதவியை நாடி நேரிலேயே வந்தேன்!”  என்றார்.
பக்தர்கள் மீது அவருக்கு அவ்வளவு பரிவு!
இதை போனிலேயே சொன்னால் போதாதா? இவ்வளவு சிரமப்பட்டு வரவேண்டுமா? எனக் கேட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறி அனுப்பி வைத்தேன். அதன் பிறகு, ஐயா மருத்துவ மனையில் இருக்கிறார் என்ற தகவல்தான் வந்தது.
அவரது பேத்தி, இவரது படுக்கை அருகே, சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படியே உறங்கச் சென்றுவிட்டாள். மறுநாள் காலை பால்காரன் வாயிலில் வந்து, அம்மா பால் என குரல் கொடுத்துள்ளார். அனைவரும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்க, ஹாலில் படுத்திருந்த மாஸ்டர், பால் வாங்கி வைக்க நினைத்து எழுந்தபோது, பேத்தி விட்டுச் சென்ற சொப்புச் சாமானில் கால் வைத்துவிட, அது, வழுக்கி, இழுத்துச் சென்றுவிட்டது. நிலை தடுமாறிய மாஸ்டர் கீழே விழுந்து விட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தார் முதல் உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கொல்லி மலை சித்தர் சந்துரு சுவாமிகள் உடன் வந்திருக்கிறார். இடுப்பு எலும்பு முறிந்துவிட்டதாகக் கூறியிருக் கிறார்கள். சென்னையில் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பரிசோதித்துப் பார்த்தபோது, எலும்பு முறிவில்லை, பந்துக்கிண்ண மூட்டு விலகியிருக்கிறது என்பது தெரியவந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு குணமடைந்து தன் மகள் வீட்டுக்குப் புறப்பட்டார். போகும் வழியில் கார் ஓட்டுநருக்கு சர்க்கரைச் சத்துக் குறைவு ஏற்பட்டு, மயங்கி
விட, கார் தாறுமாறாக ஓடியிருக்கிறது. எப்படியோ உயிர்ச் சேதம் தராமல் நின்றுபோன அந்தக்காரிலிருந்தபடியே, தனது சீடர்கள் ராசூஜந்திரன், குமரேசன் ஆகியோருக்குப் போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார். இவர்கள் இருவரும் வந்து பத்திரமாக பாபா மாஸ்டரை அழைத்துச் சென்று அவரது மகள் வீட்டில் ஒப்படைத்துவந்திருக்கிறார்கள்.
உலகத்தில் பிறந்தவர்களுக்கு, நல்ல பிள்ளைகள் அமைவதும், கடவுளுக்கு நல்ல பக்தர்கள் அமைவதும், குருவுக்கு நல்ல சீடர்கள் வாய்ப்பதும் குறைவு. ஆனால், பாபா மாஸ்டர் கொடுத்து வைத்தவர். நல்ல பிள்ளைகள், நல்ல சீடர்கள், நல்ல பக்தர்கள் என இறைவன் அவருக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறான்.
குமரேசன், ராசூஜந்திரன் போன்ற சாயி பக்தர்களை பார்ப்பது அரிது. அத்தகைய அன்புள்ளமும், தயாள சிந்தனையும் உள்ளவர்கள் அவர்கள்.
பாபா மாஸ்டர் அருணாசலம், 78 வயது நிரம்பியவர். இத்தனை வயதுவரை ஓய்வில்லாமல் உழைப்பவர்.
பல ஆலயங்கள் உருவாக, அந்த ஆலயங்கள் வளர்ச்சி பெற இவரது அயராத உழைப்பு முக்கியம். இவரது ஆலயத்தில் பணி செய்தவர்கள், புது ஆலயம் எழுப்பியபோதெல்லாம் கூட, பொறாமைப்படாமல், அவர்களை வாழ்த்தி, அவர்களது ஆலய வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் ஐயா அவர்கள்.
                                                                                                                               தொடரும்......