நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Tuesday 11 March 2014

கீரப்பாக்கத்தில் சுயம்புவான சாயி!


கீரப்பாக்கத்தில் மலையடிவாரத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்தபோது, புற்றும் அருகே வேப்ப மரக்கன்றும் இருப்பது தெரியவந்தது. இந்த இடத்தினை பார்வையிட்ட கோபர்கான் சுவாமிகள், சுயம்புவாக எழுந்தருளி நாகசாயியாக பாபா ஏற்கனவே இந்த இடத்திற்க்கு வந்துவிட்டார். எனவே இந்த இடத்தில் சிறிய கோயில் அமைத்து, வேம்பின் அடியில் பாபா விக்ரகத்தையும் , புற்றின் இருபுறமும் ராகு கேது பிரதிஷ்டை செய்து வழிபட்டால், ராகு கேது தோஷம் விலகும் என்று அருளாசி வழங்கியிருக்கிறார். அதன்படியே ஆலயம் அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆலயத்தினை பெருங்களத்தூரின் முன்னாள் கவுன்சிலரும், அம்மன் தாசருமான நடராஜன் அவர்கள் கட்டித்தருகிறார்.

பாபா ஆலயம் தவிர, பக்தர்கள் தாங்கள் உபாசிக்கும் தெய்வத்திற்க்கான ஆலயங்களையும் இங்கே உருவாக்கித்தர முன்வந்திருக்கிறார்கள்

இந்த இடத்திற்க்கு காசிலி சுவாமியான அனந்த தீர்த்த மகராஜ் எழுந்தருளிச் சென்றதற்க்கு அடையாளமாக, காசிலி சுவாமி கோயில் என்ற கோயில் ஒன்றும் இங்கு அமைக்கப்படுகிறது. இதனை அனுமனுக்குப் பின்புறம் அமைத்திட காசிலி சுவாமி தெரிவித்தமைக்கு இணங்க அவ்வாறே அமைக்கப்படவுள்ளது.

கீரப்பாக்கத்தில் உருவாகவுள்ள கோயிலில் அமையவுள்ள இன்னும் பல விபரங்கள் தொடர்ந்து இங்கு வெளியிடப்படும். அவசியம் ஒருமுறை கோயில் அமையவுள்ள இடத்திற்க்கு வருகை தாருங்கள்.

Saturday 8 March 2014

குடும்பம் தழைக்க கோயில் கட்ட உதவு!


உன் சந்ததி வாழ சந்நிதி எழுப்ப உதவு!

உலகம் மாறிவருகிறது. எதிர்கால சந்ததிகள் என்னவாகப் போகிறார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது

பந்த பாசங்களும், அன்பும் அரவணைப்பும் குறைந்து வரும் நிலையில், நமது சந்ததியினர் வேலையையும், பணத்தையும் கட்டிக்கொண்டு, படாடோபம் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு நமது மூதாதையர் குழுவாக வாழ்ந்தார்கள். நம் பெற்றோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். நாம் தனிக் குடும்பமானோம். நம் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்கிறார்கள். வேலை நிமித்தமாக மகன் ஒரு இடத்திலும், மருமகள் ஓரிடத்திலும், பேரப்பிள்ளை விடுதியிலும், பெரியவர்கள் முதியோர் இல்லத்திலும் வாழ்கிறார்கள். சமூகம் தனி மனிதன் என்ற பிரிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

எவ்வளவு சொத்து சேர்த்தாலும், பணமிருந்தாலும் மனதில் நிம்மதியில்லாத நிலை வந்துவிட்டது. இவர்கள் இப்போது மதுபானக் கடைகளுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லலாம். மனம் போன போக்கிலும் நடக்கலாம். கடைசியில் ஒரு காலம் இருக்கிறது. அது கடவுளைத் தேடி வரும் காலம்

எங்கும் கிடைக்காத நிம்மதியை பெறுவதற்காக கடவுளைத் தேடி ஆலயத்திற்க்கு வருவார்கள். இப்போது எல்லா இடமும் அடுக்கு மாடி வீடுகளாவதால் ஆலயம் அமைக்கமாட்டார்கள். அவர்களால் முடியாது. ஆனால், நாம் நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை செய்யவே வாழ்கிறோம். இவர்கள் செம்மையாக வாழ, ஆலயம் செய்வோம். ஆளுக்கொரு ஆலயம் செய்ய முடியாது. ஊருக்கு ஒரு ஆலயம் செய்யலாம். ஊருக்கு ஒரு ஆலயம் அமைக்க முடியாவிட்டாலும், நகருக்கு ஒரு ஆலயமாவது அமைக்க நம்மால் முடியும்.

இந்த சேவையை எல்லோரும் சேர்ந்து செய்யலாம். வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கு அருகே கீரப்பாக்கம் என்ற கிராமத்தில் மலைப்பகுதியில் பாபாவிற்க்கு மட்டுமன்றி, பக்தர்கள் வணங்குகின்ற மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைகிறது.

முதன்முதலாக விநாயகர் ஆலயம் மலையின் மலையின் கீழ்ப்பகுதியில் அமைகிறது.

ஆலயம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் திருக்கரங்களால் ஆலயம் அமைத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்.

இது எதிர்காலத்திற்க்கு நாம் செய்கிற உண்மையான தொண்டு. ஒரு செங்கல் துண்டு, ஒரு இரும்புத்துண்டு என துண்டு துண்டுகளாக இணைத்து தூண்களையும், கோயிலையும் உருவாக்கலாம். வாருங்கள்! உங்கள் கைங்கர்யத்தோடு நாங்கள் பொறுப்பெடுத்து ஆலயம் அமைக்க முயற்சித்து வருகிறோம். முழு மனதோடு இந்தக்கோயில் திருப்பணிக்கு அழைக்கிறோம். முடிந்தவர்கள் உதவலாம். முடியாதவர்கள் பிரார்த்திக்கலாம்

விவரங்களுக்கும் நன்கொடைகள் அனுப்பவும்

SHIRDI SAI SAMADARMA SAMAJ, 3E/A, SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR, CHENNAI - 600 063. Phone No. 9841203311

Friday 7 March 2014

கோயில் பூமி பூஜை புகைப்படங்கள்

   பெருங்களத்தூர், சீரடி சாயி சமதர்ம சமாஜ அறக்கட்டளையால் உருவாக்கப்படும் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  - ரத்தின மங்கலம்  -  கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.

பூமி பூஜை புகைப்படங்கள்:








கோயில் கட்டலாம் வாருங்கள்!


      திக்கெட்டும் சாயி கோயில்,  திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை உருவாக்கி,  நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  - ரத்தின மங்கலம்  -  கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக் கூடம்,  தியானக் கூடம்,  அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின் வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.

     மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி  ”மாணவ ஞான  கணபதி ஆலயமாக”  இந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.

எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல் கம்பிகள், செங்கற்கள்,  மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ  சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.

சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாபா உங்கள் மனதில்,  இந்தக் கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.

      மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை அணுகவும்


சாயி வரதராஜன்