பாபாவின்
அற்புதங்களை யாராலும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. உணர்வினால்
மட்டுமே அனுபவித்து
மகிழ்கிற நிலை அது. இந்த
அற்புதங்களை நான் கூறப்போகிறேன் என்பது
மணலை கயிறாகத் திரிக்க முற்படுகிற செயலைப்
போன்றது.
இந்த
பரவச அனுபவத்தை அனுபவித்த ஆயிரமாயிரம் மக்கள் இன்று பாபாவின்
அடிமைகளாக சேவை சாதித்துக் கொண்டிருக்கிறhர்கள். அவர் மேலுள்ள
பக்தி, எந்த இழப்புகளையும் தாங்கவும், எதிர்ப்புகளைத் தாண்டவும், கடன் சுமைகளை மீறி
வாழவும் தைரியத்தை நமக்குத் தந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்
பரவச உணர்வுகள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டுமானால்,
பாபாவுக்கு அவர்களை அறிமுகப்படுத்துங்கள். பிறருக்காக வேண்டுதல்
செய்யுங்கள். பாபாவின் போட்டோக்கள் அல்லது சிலைகளை வாங்கி அன்பளிப்பு செய்யுங்கள்.
உங்கள்
ஆசியுடன் இப்போது புதிய பாபா ஆலயம் மற்றும்
அன்னதானக் கூடம் ஆகியவை
கீரப்பாக்கத்தில் வேகமாக வளர்ந்து
வருகின்றன.
பணத்தை
சேர்த்து வைத்து இஞ்சினியரிடம் தந்தால் அழகாகக்கட்டித் தருவார்
என ஆலோசனையாகத்தெரிவித்தார்கள்.
பணம்
சேர்க்கிற நிலையிலிருந்தால் இப்போது
பக்கத்திலுள்ள இடமே விலைக்கு வருகிறது..
வாங்கிவிடுவேன். அந்த நிலையில்லாததால் அன்றன்றைக்கு என்ன கிடைக்கிறதோ அதை
வைத்து பணிகளை பாபா நடத்த வைக்கிறார்
இடையிடையே
பிரச்சினைகளும் வரத்தான் செய்கின்றன. அவற்றைத் தாண்டி இந்த விக்ஷயங்கள் நடக்கின்றன. வயதாவதால் ஒவ்வொரு நாளும் உடல்
சோர்வு அடைகிறது, பாபா மீதுள்ள பக்தி பரவசப்படுத்துவதால்
மனம் துடிப்பாகி செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால்
தடைகளைத் தாண்டி ஆலயப் பணிகள் நடக்கின்றன.
ஒன்றை
மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... இது சாயி வரதராஜன்
கட்டுகிற கோயில் அல்ல. சாயி பக்தர்கள்
கட்டுகிற கோயில். நீங்கள் வாங்கி
அனுப்புகிற ஒவ்வொரு
பொருளும் நீங்களாக அல்ல, பாபாவின் தூண்டுதலால்
உங்கள் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்த கோயில் பணிகளில்
நீங்கள் செய்கிற கைங்கர்யம் உங்கள் பாவங்களை விலக்கி,
புண்ணியங்களைச் சேர்த்து தலைமுறையை நன்றாக வாழச் செய்யும்.
நன்றாக
வாழ, இன்றேனும் பிரார்த்தனை செய்யுங்கள். என்றேனும் அவரது திருப்பணிக்கு உதவி செய்யுங்கள். சாயிதரிசனம்
பத்திரிகையை விலை கொடுத்து வாங்கிப்படிப்பதும், சந்தாவை புதுப்பித்துக் கொள்வதும்,
பிறருக்காக நாம் சந்தா தொகை செலுத்தி பத்திரிகையை பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் கூட
அவருக்குச் செய்கிற சேவையே அன்புடன்
சாயி
வரதராஜன்

No comments:
Post a Comment