ஓர்
இடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தபோது
தான் புற்றும் வேப்ப மரமும் இருப்பது
தெரிய வந்தது. அது ஆலயப்
பணிக்கு அச்சாரம்.. இங்கே முதலில் சேவையைத் துவக்கு
என பாபா மாஸ்டர் ஆணை
பிறப்பித்தார்.
சாயி
பக்தர்கள் பாபாவை பற்றிக்கொண்டால் போதும், சாயி பக்தர்களாக
இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் ராகு - கேது
- கால
சர்ப்ப தோஷம் - சனி
தோக்ஷம் போன்றவற்றால்
பாதிக்கப்படுகிறவர்கள், கடன் பட்டு அவதிப்படுகிறவர்கள்,
திருமணத் தடை உள்ளவர்கள் இப்படிப்பட்ட மக்கள் நன்மையுறுவதற்காக, அவர்களுக்கு
பரிகாரத் தலங்களை இங்கே நிறுவி
அவர்கள் நல் வாழ்வுக்கு உதவுங்கள் என டாக்டர் கிருபளானியும் தெரிவித்தார்.
எனது
நண்பர்கள் ஆறுமுகம், _தரன், வேணுகோபால், கார்த்திக்
ஆகியோருடன் ஆலய அமைப்பு உருவாக்க வேலைகளை
பார்வையிட வந்தேன்.
இவர்களுடன்
கீரப்பாக்கத்தில் இருந்தபோது, ஒரு கார் வருவதை கவனித்தேன்.
என்னைப் பார்த்ததும் கார் நின்றது. அதிலிருந்து நால்வர் இறங்கினார்கள்.
அவர்கள்
சென்னை வேளச்சேரி, அன்னை இந்திரா நகரில் வசிக்கிற
ரவிக்குமார், மோகனா தம்பதியர். தங்கள் குழந்தைகள் சந்தீப்,
பவித்ரா, மோகனாவின் தம்பி மகள் கணிதா
ஆகியோர்.
கீரப்பாக்கம்
பாபா ஆலயத்தைப் பார்க்க வந்ததாகச்சொன்னார்கள். அவர்களோடு கோயில்
அமையவுள்ள கொத்து மலைக்குச் சென்றேன்.
கீரப்பாக்கம்
சாயி பாபா ஆலய வரலாற்றில்
முதன் முதலாக, என்னோடு மலை ஏறி
மானசீகமாக பாபாவை தரிசனம் செய்தவர்கள் இந்தக் குடும்பத்தார். அது
மட்டுமல்ல, பாபாவுக்கு
முதல் நன்கொடை அளித்தவர்களும் இவர்கள்தான்.
பத்தாயிரம் ரூபாயை அதே இடத்தில் அளித்தார்கள்.
முதன் முதலாக இந்த ஆலயக் கூரை
அமைப்பதற்காக சிமெண்டு சீட்டு வாங்க பதினைந்தாயிரம் ணுபாயை அளித்தவர்களும் இவர்கள் என்பது விசேஷம்.
அது மட்டுமல்ல, சாயியுடன் என்னையும் சேர்த்து இந்த இடத்தில் நமஸ்கரித்த முதல்
பக்தர்களும் இவர்கள்தான்.
இந்தக்
குடும்பத்தைப் பற்றிய விவரம் எதுவும்
இந்தக் கட்டுரை எழுதும் காலம் வரையில்
தெரியாது. ஆனால்,
தேர்வு செய்து, இவர்களிடம் பாபா
முதல் தட்சணை பெற்றதிலிருந்து இவர்கள் பாக்கியசாலிகள் என்பதும், இவர்கள் பாதம்
இந்த இடத்தில் பட்டதையும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இடத்தைச்
சீரமைக்க முதன் முதலாகப் பணம்
கொடுத்தவர் சென்னை சாலிகிராமம் பார்வதி பவன் ஹோட்டல் அதிபர்
தோத்தாத்ரி என்ற பெரியவர். முதல்
செங்கல் லோடு அனுப்பியவர் ஆர்.கே.எஸ்.
முதல்
பூஜை நடத்தியவர் அனுபூதி சித்தர். ஆலய
அமைப்புக்கான முதல்
அடித்தளம் அமைத்தவர் ரமேஷ் ஸ்தபதி. மலைக்கோயில் அமைய
என்னோடு முதல் முயற்சி செய்ததோடு, எந்த
உதவியையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என
முதல் வாக்குறுதி அளித்தவர் சி. சண்முகம். முதல்
பிரார்த்தனை வைத்தவர் பெயர் சங்கர மூர்த்தி
என்ற ஆடிட்டர். இவர் ஒரிசாவில் ஐயப்பன்
கோயில் கட்டியவர்.
பாபா
விக்ரகத்தை முதன் முதலாக வாங்கித்தந்தவர்
சென்னை ஆதம்பாக்கம் முனுசாமி என்ற பெரியவர். முதன் முதலாக பெருந்தொகையை
நன்கொடையாக அளித்தவரும்
இவர்தான்.
முதல்
விக்கிரகத்திற்காக நான் கேட்டது சேலம்
சதீஷ். முதல் கருங்கல்
பாபா விக்ரமூம் அமைப்பவர் இவர். வெளியூரிலிருந்து முதல் நன்கொடை தந்தவர்
சேலம் பிரேம்குமார் குடும்பத்தார். முதல் பிரதிஷ்டை செய்ய விநாயகர்
சிலையை தந்தவர்கள் பெருங்களத்தூர் முன்னாள் கவுன்சிலர் கே. எஸ். நடராஜன்
மற்றும் அவரது நண்பர் பக்தவத்சலம் ராம
மூர்த்தி.
காலசர்ப்ப
தோக்ஷம் முதலியவை, ராகு கேது தோக்ஷங்கள் உள்ளவர்கள்,
திருமணத் தடை உள்ளவர்கள் ஆகியோர் பலனடைவதற்காக முதலில்
பரிகாரத் தலங்களை அமைக்க முடிவு செய்து
அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
(விநாயகரை
விடாமல் தொழுதாலே இந்த தோக்ஷங்கள் விலகும். படமெடுத்து சீறுகிற மிகப்பெரிய ராட்சத நாகங்களையும்,
அவற்றை யானை லாவகமாகப் பிடித்து தோலை
உரித்து கட்டை போல மாற்றி
வீசுவதையும் ஒரு நாள் (15-2-2014)
கனவில் தரிசித்தேன். ஆகவே இந்த முடிவுக்கு
வந்தேன்.)
14-
2- 2014 ல் பாபா ஆலய
வேலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளையில், வழியில் ஒரு கார் பாபா ஆலயம்
பற்றி விசாரிப்பதை அறிந்து, அவர்களை அணுகியபோது, கீரப்பாக்கம்
பாபா கோயில் செல்லவேண்டும் என்றார்கள். என் பின்னால் வருமாறு
கூறிவிட்டு, அவர்களுக்கு
முன்னால் சென்றேன்.
தொடரும்
தொடரும்

No comments:
Post a Comment