இது
அந்தக் காலத்து ஜமீன் சொத்து..
வனத்துறை எல்லை முடிந்து, இது இந்த ஊர்
மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அனுபவித்து வருகிற பகுதியாக உள்ளது. அவர்களிடம்
விசாரிக்கலாம், தந்தால் கோயில் அமைக்கலாம் என்றார்.
கார்த்திக்
தனது மாமா பாபு என்பவரிடம்
அழைத்துச்சென்றார். அவர் தனது ஊர்க்காரர்களிடம்
பேசி, இந்த இடத்தை பெற்றுத் தந்தார்.
இங்கு
பாபாவுக்கு கோயில் போன்ற அமைப்புகளை
நிறுவ, தலைவரின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும் என இரவு முழுவதும் ஏதோ
ஓர் உந்துதல் என் மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. மறுநாள்
காலையில் கார்த்திக்கிடம்
இது பற்றி தெரிவித்து, அவருடன்
தலைவரைப் போய்ப் பார்த்தேன்.
அந்தத்
தலைவர் பெயர் ஹரிகிருஷ்ணன். ஓர்
அரசியல்வாதிக்கு உரிய
எந்த பகட்டும், பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருந்தார்.
தலைவர்
பொறுப்பு வரும் போகும்.. இது
நிரந்தரம் அல்ல. ஆனால், இந்த ஊர்
மக்களுக்கு நன்மை செய்து அவர்கள் மனதில்
நிற்கவேண்டும். எனக்குப் பிறகும் என் பெயரை இந்த மக்கள்
நினைக்கவேண்டும் என நினைக்கிறவன் நான். கடவுள் எனக்கு
சேவை செய்ய ஒரு வாய்ப்பைத்
தந்திருக்கிறார். இந்த
ஊர் மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற
வேட்கையில் சேவை செய்கிறேன்.. என்ற அவர், நானும்
சாயி பக்தன் தான்.. பாபாவுக்கு மலையில் கோயில் அமைக்க
முயற்சி செய்தேன்.. ஏனோ முடியவில்லை என்றார்.
சிறிது
நேரம் யோசித்து, அந்தப் பணியை நான்
எடுத்துச் செய்ய ஆட்சேபனையில்லையே- எனக்கேட்டேன்.
நிச்சயமாக
இல்லை. ஊர் மக்களிடம் பேசி
அனுமதி பெற்றுத் தருகிறேன். வேறு ஏதேனும் பார்மாலிட்டி
இருந்தால் முடித்துக்கொண்டு
கட்டுங்கள். நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்றார்.
அவருடன்
சென்றபோது, நீலமேகம், வெங்கட்ராமன் போன்ற ஊர்ப் பெரியவர்கள்
இந்த ஊரில் பாபா வந்தால் பெருமைக்குரிய
விக்ஷயமாக இருக்கும். அதற்கு ஒத்துழைப்பு தருகிறோம்
என்றார்கள்.
ஊர்
மக்கள் நல்லவர்கள்.. ஊர்த் தலைவரும் நல்லவராக இருக்கிறார்.
எனவே, இந்த ஊரை பாபா
தேர்வு செய்திருக்கிறார்
என்ற முடிவுக்கு வந்தேன்.
பாபா,
இந்த நல்ல ஊரில் கால்
எடுத்து வைக்கிற நேரம் அனைவரும் சுபீட்சமானவர்களாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையுடன், தலைவருடன் அந்த மலையைப் பார்வையிடச் சென்றேன்.
மலை
முழுவதும் கள்ளி முள். நடக்க
முடியுமா? என மனதுக்குள் கேட்டபோது,
ஒருவரது செல்போனில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை.. ஏற்றிவிடப்பா.. தூக்கிவிடப்பா என்ற ஐயப்பன் பாடல்
ஒலித்தது.
சற்று
நேரத்தில்.. ஓர் ஒலிப் பெருக்கியில்,
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
என்ற பாடல் ஒலிபரப்பானது..
அது
கீரப்பாக்கம் மலைதானோ- நல்ல சகுனமாக இருக்கிறதே என
நினைத்தபடி மலை ஏறினேன்.
எல்லாம்
மங்களகரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கீரப்பாக்கத்திற்குச் சென்றால், அனைத்து
பிரச்சினைகளும் கிள்ளுக்கீரைகள்
போல கிள்ளப்படும் என பாபா மாஸ்டர் இதைப்
பார்வையிட்டு வாழ்த்தினார். அனுபூதி சித்தர் இந்த
இடத்தை ஆசீர்வதித்தார். காசிலி சுவாமிகள் வந்து
இந்த ஊர் உலகப் புகழ்
பெற்றதாக மாறும் என்றார்.
தொடரும்
தொடரும்

No comments:
Post a Comment