சீரடியிலிருந்து 25 மைல்
தொலைவிலுள்ள குக்கிராமமான காசிலி என்ற ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துத் தனிமையில்
வாழ்ந்து வரும் பிரம்மச்சாரி சுப்பிரமண்யம் சுவாமிகள்.
தமிழகம் பூர்வீகமானாலும்
மகாராஷ்டிர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அங்கே ஆன்மீகப் பணிகளைச் செய்து
வருகிறார்.
சுமார் இரண்டரை லட்சம் மகாலட்சுமி
யாகம் நடத்தியவர். பாபாவின் அருளை முழுமையாகப் பெற்றவர். இவர் ஒரு தமிழர் என்பதால்,
அந்த மாநிலத்தில் இவருக்கு எதிரான பல தொல்லைகள் அவ்வப்போது தரப்பட்டு வந்தன. இவற்றையெல்லாம்
பாபா அருளால் வென்று வந்தவர்.
தேள், பாம்பு போன்றவை கடித்து
யாரேனும் வந்தால், அவர்கள் உடலிலுள்ள விஷத்தை தன் உடலில் ஏற்றி அதை சரி செய்யும் சக்தி
இவரிடம் உண்டு. இவருடைய ஆன்மீக சக்தியை மக்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில்
இவர் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
அதற்கேற்ப, ஏழைகள் முதல்
செல்வந்தர்கள், செல்வாக்கு உள்ளவர்கள் வரையில் இவரை காசிலிகாவோன் சென்று தரிசித்து
வந்தார்கள்.
காசிலிகாவோன் சென்று அவரை
தரிசிக்க முடியாத சாயி பக்தர்கள், எப்படியேனும் அவரை தரிசித்து விட வேண்டும் என்பதற்காக,
அவரது வருகை பற்றி விசாரித்த வண்ணம் இருந்தார்கள்.
டிசம்பர் 29ம் நாள் சென்னைக்கு
இவரை வரவேற்பதற்காக மிகப் பெரிய அளவில் _ சாயிதரிசனம் சார்பில் போஸ்டர்கள், பேனர்கள்
வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
28ம் நாள் மாலையில் சாலிகிராமத்தில்
உள்ள தோத்தாத்ரி அவர்களின் பார்வதி பவன் ஓட்டலில் நடந்த மாபெரும் பஜன் மற்றும் பக்தி
மேளாவில் கலந்துகொண்டார்.
மறுநாள் காலை கீரப்பாக்கத்தில்
பாபா கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டவர், தொடர்ந்து பெருங்களத்தூர் பிரார்த்தனை
மையத்தில் மாலை ஏழு மணி வரை பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு, நங்க நல்லூரில் சாயிபக்தர்கள்
அழைத்துச் சென்று ஆசி பெற்றார்கள்.
அன்றிரவு சாயி வரதராஜன்
வீட்டில் தங்கி ஓய்வெடுத்த சுவாமிகள், மறுநாள் திருவண்ணாமலை - தெள்ளாறு பாபா ஆலயத்திலிருந்து
பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நாமக்கல்லில் பாபா ஆலய அடிக்கல்
நாட்டு விழாவில் கலந்துகொண்டதோடு, திருச்சி போன்ற இடங்களிலும் ஆசி வழங்கினார்.
இவரை பல மாதங்களாக வற்புறுத்தி
அழைத்த கும்பகோணம் சாயி பக்தர் ஜெயச்சந்திரன் அழைப்பை ஏற்று, அங்கும் விஜயம் செய்தார்.
வழியெங்கும் பயணித்த சுவாமிஜி, சொந்த ஊரான நாகர்கோயிலில் ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பி
வரும்போதும் பக்தர்களை சந்தித்தார்.
நெய்வேலி சாயி பக்தர்கள்
சிவப்புக் கம்பளம் விரித்து, வழியெங்கும் மலரால் பாதை அமைத்து வரவேற்று கவுரவித்து
ஆசிபெற்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊராகச் சென்று,
திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து, தனது இருப்பிடம் சென்றிருக்கிறார் சுவாமிகள்.
சுவாமிகளின் வருகை சாயி
பக்தர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்தப் பயணம் சுவாமிகளுக்கு பெரிய வெற்றி,
அவரது வாழ்வில் திருப்பு முனை.
சுவாமிஜி நமது சங்கத்தில்
இருந்தால் காசிலி தரிசனத்திற்காக கீரப்பாக்கம் – பெருங்களத்தூரில் இருந்து தனிப்பேருந்து
இயக்கப்படும் என சாயி வரதராஜன் தெரிவித்திருக்கிறார்.
எங்கோ ஒரு மூலையில் இருந்த
என்னை, தனது ஆன்ம சக்தியால் வெளிப்படுத்தி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்
சாயி வரதராஜன் என்று சுவாமிகள் நெகிழ்ச்சியோடு கூறியது சாயி தரிசனத்திற்குக் கிடைத்த
வெற்றி.
சாயி வீரமணி
No comments:
Post a Comment