சீரடி
கிராம மக்கள் எவ்வளவு புண்ணியம்
செய்தவர்களோ, அவர்களுக்கு
இணையானவர்கள் கீரப்பாக்கம்
கிராம மக்கள்.
இந்த
ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமையப் போகிறது என்பது
நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒன்று. அதேபோல, கோயில்
அமைவதற்கு முன்னதாகவே பாபாவுக்காக மூன்று சிலைகள் தயார் நிலையில் இருக்கின்றன.
இவற்றை
வைத்துப் பார்க்கும் போது, இந்த கிராமத்திற்கும் பாபாவுக்கும் பூர்வ ஜென்ம வாசனை நிச்சயமாக
உண்டு என அடித்துக் கூறமுடியும்.
கோயில்
கட்டிவிட்டு, சிலை வைக்க முடியாத நிலையுள்ள இடங்களைப் பார்த்திருக்கிறோம்.
சிலை வாங்கிவிட்டு, கோயில் கட்ட இடமின்றி
தவிக்கும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், இங்கே எல்லாம்
தயார் நிலையில் இருக்கிறது. எடுத்துச் செய்கிற வசதி உள்ளவர்கள் குறைவு
என்பதைத் தவிர. இந்த ஊர்
மக்களும், ஊரை ஆளுகின்ற தலைவரும், அவரது மன்ற உறுப்பினர்களும், ஆலோசகரும் கூட தெய்வ பக்தி மிக்கவர்கள்.
இவர்களின் ஒற்றுமை உணர்வுக்கு இறைவன் இரக்கம்
காட்டுகிறான்.
சொன்னால்
நம்ப மாட்டீர்கள். கால்நடைகள் கூட, இந்தப் பக்கம்
வந்து ஆலயம் தோன்றவுள்ள இடத்தில்
கூடி நின்று பிறகு செல்கின்றன. இதற்கு
முன்பு இப்படி நடந்ததில்லை என்கிறார்கள் அவ்வூர்க்காரர்கள்.
நினைத்ததற்கு
மேலாக பணிகள் நடந்து வருகின்றன.
பாபா நடத்திக் கொள்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
கோயில்
கட்ட வேண்டும் என பாபா உங்கள் கனவில்
வந்து சொன்னாரா? என கேட்கிறார்கள்.
நிச்சயமாக
பாபா கனவில் வந்து இங்கு கோயில் கட்டச்சொல்லவில்லை.
வாழ்நாளில் என் பங்களிப்பை இச்சமூகத்திற்குச்செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வு முன்னோக்கித்
தள்ளுவதாலும், சமதர்மத்தை நிலை
நிறுத்தும் சாயி கோட்பாடு பரவவும் கோயில்
கட்ட முனைகிறேன்.
பெருங்களத்தூரைச்
சுற்றிலும் பாபாவுக்கு கோயில்கள் அமைக்கவே தணியாத ஆசை. ஆனால்,
இங்கு இடமதிப்பு நாளுக்கு நாள் அதிகமாவதால், என்னால்
இடத்தை வாங்க முடியவில்லை.
இந்த
நிலையில்தான் ஒரு பெரியவர் நண்பகல்
வேளையில் கோயிலுக்கு
பாபாவை தரிசிக்க வந்து, பேசிக்கொண்டிருந்தார். அவர் அவ்வளவு
படித்தவராகத் தெரியவில்லை.
ஆனால் எனது எழுத்துக்களை, சேவையை
வெகுவாகப் புகழ்ந்தார்.
தற்கொலை
செய்துகொள்ளப் போகிறவன்கூட உனது புத்தகத்தைப் படித்து மறுவாழ்வு அடைகிறான்.
பலரது வாழ்க்கை உன்னால் திரும்பத் தரப்படுகிறது.
அப்படிப் பட்ட சக்தியை பாபா
உனக்குக் கொடுத்திருக்கிறார்,
ஆனால் நீ பாபாவுக்கு ஒரே
இடத்தில் இங்கு கோயில் அமைத்திருக்கிறாய்.. நான்கு
திசைகளிலும் அவரை உட்கார வைக்கவேண்டும். அவருக்குக்
கோயில் கட்ட வேண்டும் என
பாபா எதிர்பார்க்கிறார் என்பது போல பேசிவிட்டுச்
சென்றார்.
இடம்
எங்கே மலிவாகக் கிடைக்கும் எனக்கேட்டபோது, கூடுவாஞ்சேரியின் உள்ளே சென்றால், பெருமாட்டு
நல்லு}ர் என்ற ஊர்
உள்ளது. அங்கு சென்று கேளுங்கள், அதன் சுற்றுப்புறத்தில் கேளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்த
நிலையில்தான் கார்த்திக் என்ற தம்பி நமது
கோயிலுக்கு வந்தார்.
வழக்கமாக வருகிற அவர், ஏதோ
பிரச்சினையின் காரணமாக,
பல மாதங்களாக வரவில்லை. அவரை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர்
என நினைத்திருந்தேன். இதனால் அவரிடம் இடம்
பற்றி விசாரித்தேன்.
அந்தத்
தம்பியோடு, கீரப்பாக்கம் வழியாக வந்தபோது, இந்த மலை அடிவாரத்தைப்
பார்த்து, அழகான பகுதியாக இருக்கிறது..
இங்கு பாபாவுக்கு கோயில் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.. ஆனால் இது வனத்துறையிடம் இருந்தால் அவ்வாறு செய்ய இயலாதே எனத்
தெரிவித்தேன்.
தொடரும்
தொடரும்

No comments:
Post a Comment