தாண்டக்கூடியவைதான்
தடை எனப்படுகிறது. அது நமக்கு ஒரு
போதும் முட்டுச் சுவர் ஆகாது. குட்டை
நீரை ஓடவிடாமல் செய்யமுடியும். காட்டாற்று வெள்ளத்திற்கு கரை போட்டுவிட முடியாது.
இறைவனின்
அருள் நமக்குப் பூரணமாக சித்திக்க ஆரம்பித்துவிட்டால், எப்படிப்பட்ட தடைகளையும் நாம் கடக்கும் சூழலை அவரே உண்டாக்குவார்.
இதற்கிடையில்
அவர் தருகிற சோதனைகளைக் கண்டு
நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது.. பொறுத்துக்கொள்ளவும், சகிக்கவும் வேண்டும். இதை உணர்த்தும் நிகழ்வுகளை பாபா கீரப்பாக்கம்
ஆலய நிகழ்வில் வைத்துத் தந்தார்.
சீரடியில்
ஜனவரி மாதம் கால் வைத்த
ஒரு மணி நேரத்திற்குள் மனதை பாதிக்கிற செய்தி.
என்னோடு வந்த கோதண்டபாணி அவர்களின் துணைவியார் கழுத்திலிருந்த தாலிச் சரடை, பறித்துச்
சென்று விட்டார்கள் என்ற தகவல்.
கோதண்டபாணி
கண்களில் எப்போதும் கருணை தெரியும். அவரைப் பார்க்கும் போதெல்லாம்
அந்தக் கண்களையே கவனிப்பேன். அப்படிப் பட்ட கண்களில் சோகம் தெரிவதைக்
கண்டு திகைத்துப் போனேன். ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் இல்லை.
ஒன்று
மட்டும் தெரிந்தது. அவரது ஆயுள் முடிந்து
அவரது துணைவியார் வாழ்க்கையை இழந்தவர் ஆக வேண்டிய காலக்கட்டம் இது. பாபா, அதை
மாற்றி யிருக்கிறார் என்பது. அதை இப்போதுச்
சொன்னால் அவர் மனம் புண்படும் அல்லவா
என நினைத்தபடி, ”நீங்கள்
கவலைப்படாதீர்கள். இந்த இழப்புக்கான செலவை நான்
ஏற்றுக்கொள்கிறேன்.. நீங்கள் பாபா முன்னிலையில் சென்று
வேறு தாலி கட்டிக்கொள்ளுங்கள்!” என்றேன்.
அவரோடு செல்வதற்காக என்னுடன்
இருந்த கலியன், சிவகாமி உட்பட சிலரை
அனுப்பினேன். வந்தவுடனே எப்போதும் எனது தந்தையாரை ஒரு
முறை தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவேன்.
அப்படித்தான்
அதிகாலையிலேயே அவரை தரிசனம் செய்துவிட்டு, வந்து வாசலில்
நிற்கும்போதுதான் இந்த சோகத் தகவல். அதைப் பற்றி
புகார் செய்ய முயன்றும் பலனில்லை. நீம்
பேலஸ் ஓட்டல் உரிமையாளர் எந்த
ஒரு தகவலையும் சரியாகக் கூறவில்லை. ஓட்டலில் பாதுகாப்பும் இல்லை. பக்தர்கள் உணவருந்தியபின்,
அறைக்கு வந்தேன்.
வந்தது
முதல் நெஞ்சு இறுக்கமாக ஆரம்பித்தது.
கடுமையான வலி... கலியன், ஸ்ரீதர்
ஆகியோரிடம் பக்தர்களை கவனமாக அழைத்துச் செல்லுமாறு
கூறிவிட்டு அறைக்குள்
சென்று படுத்தேன்..
என்பது புரிந்தது. பாபா எனக்கு மகிழ்ச்சிதான்.. தொடரும்

No comments:
Post a Comment