நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K
இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.
பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!
Thursday, 23 June 2016
Tuesday, 21 June 2016
கீரப்பாக்கத்தில் பரிகார லிங்கம்
அயப்பாக்கத்திலிருந்து வரும் பார்வதி அம்மாவின் தந்தையார் வரதராஜ முதலியார். தி.நகர் மற்றும் சைதாப்பேட்டைக்கு இடையில் கண்ணம்மா பேட்டை என்ற
இடம் இருக்கிறது. கண்ணம்மா
பேட்டை சென்றால் சென்னையிலேயே புகழ்பெற்ற இடுகாடு என்றுதான் எல்லோருக்கும் தெரியும். இந்த இடுகாட்டு நிலத்தை அளித்தவர்
வரதராஜ முதலியார். அவர்களின்
துணைவியார் பெயர் கண்ணம்மா. அவருடைய பெயரால்தான் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் அம்பாள் ஆலயங்கள் என பல ஆலயங்களுக்கு தானம் தந்து சொத்துக்களை இழந்தவர். இவருக்கு பதினாறு பிள்ளைகள்.
ஆண்கள் ஐந்து பேர். பதினோறு
பெண்கள். இவர்களில் தற்போது மூன்று பேர்தான் உயிரோடு இருக்கிறார்கள். மூத்தவர் வேதாச்சலம் மும்பையில் வசிக்கிறார். பார்வதி அம்மா அயப்பாக்கத்தில் வசிக்கிறார். ஆனந்தன் உடல்நலம்
பாதிக்கப்பட்டு தனியாக வசிக்கிறார்.
பார்வதி அம்மாவின் மகன் மனோகரன். சாயி பக்தரான இவர் சமீபத்தில்
காலமாகி விட்டார். இவர் நினைவாக
கீரப்பாக்கம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ஏதேனும் விக்ரஹம் வாங்கித்தருவதாக பார்வதி
அம்மா கூறியிருந்தார். அவரிடம்
சிவபெருமான் விக்ரஹத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டிருக்கிறோம். கீழேயுள்ள பாபா ஆலயத்தில் ராகு - கேது பரிகார லிங்கமாக இது பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும்போது அது பற்றிய விவரம் வெளியிடப்படும்.
Thursday, 16 June 2016
குழுவாக சேவை செய்ய வாங்கோ!
கடந்த இதழில் ராஜா ராம் என்ற சாயி பக்தர், கீரப்பாக்கம் பாபா ஆலயத்திற்குச் செய்த சேவை பற்றி படித்தபோது எங்களுக்கும் செல்லவேண்டும் என்று தோன்றியதால் சென்றிருந்தோம்.
மலையில் பிரம்மாண்டமாக பெருமாள் விக்ரஹம் நிறுவப்பட்டு
கோயில் கட்டுமானப் பணி
தொடர்ந்துகொண்டிருந்தது. ஆலயத்திற்கான பெரும் பாலான செலவுகளை சாயி வரதராஜன் செய்வதாகக் கேள்விப்பட்டு பிரமித்துப் போனோம். எங்கள் பிரமிப்புக்குக் காரணம், ஒரு சாதாரண மனிதனால் எப்படி இவ்வளவு பெரிய திட்டத்தை எடுத்து நடத்த
முடிகிறது என்பதுதான்.
பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பற்றி
எங்கள் வீட்டில் கூறியபோது, என் தந்தையார் உண்மையாகவா?
என பலமுறை கேட்டுக்கொண்டிருந்தார். பெருமாளை அவ்வளவு சீக்கிரம்
எளிதாகக் கொண்டு வந்து யாராலும்
நிறுத்தமுடியாது. இவர் எப்படி நிறுத்தினார்? எனக் கேட்டார். பெருமாளை வெயிலில் இருக்கவிடக்கூடாது, உன்னால் முடிந்ததைச் செய் எனக் கூறினார்.
இது எப்படி சாத்தியமாகும் எனக் கேட்டபோது, வெறும் ஐம்பது பேர் தனித்தனி
குழுவாக இணைந்து நமக்குள் ஒரு குழுவுக்கு ஐம்பதாயிரம் வீதம் சேர்த்தாலே இந்தக் கோயில் பிரம்மாண்டமாக அமையும். அந்த மனிதனுக்குச் சுமையும்
குறையும்” என்று கூறினார். இது நல்ல யோசனையாகத்தெரிந்தது. எனவே சாயி தரிசனம்
வாசகர்களுக்கு இந்த யோசனையை முன்வைக்கிறேன்.
இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டுமானால் நிறைய தூரம்
அவர் பயணிக்க வேண்டியிருக்கும்.
எங்களால் முடிந்தது என ஐம்பது மூட்டை சிமெண்ட் வாங்கிக்
கொடுத்துவிட்டு வந்தோம். தொடர்ந்து சின்னச் சின்ன சேவைகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்தோம்.
விருப்பமுள்ளவர்கள் இணைந்து இந்த சேவையை சாதிக்கலாம். வருவீர்களா?
-என்.எஸ். அனந்தராமன்,
அரும்பாக்கம்
Monday, 13 June 2016
Sunday, 12 June 2016
Subscribe to:
Posts (Atom)




